Sunday, February 26, 2012

கூகுள் இன்டோர் (Google Indoor)


Saturday, December 10, 2011

கூகுள் இன்டோர் (Google Indoor)

வீதி வரை வந்த கூகுள் மேப் இப்போது வீட்டிற்குள் வந்துவிட்டது .ஆம் கூகுள் "Indoor" மென்பொருள் கொண்டு இப்போது விமான நிலையம்,ஹோட்டல்,சாப்பிங் மால்,திரையரங்கம்...,ஆகியவற்றின் உள் கட்டமைப்பு வரைபடங்களை பார்க்கமுடியும்.உதாரணமாக உங்கள் நண்பர் ஒருவரை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்று பார்க்க விரும்புகிறீர்கள் என்றால் அவர் அந்த ஹோட்டலில் 5 ஆவது தளத்தில் 512 வது அறையில் இருக்கிறார் என்றால் இந்த வரைபடம் உதவியுடன் எளிதாக அவர் இருக்கும் இடத்திற்கு செல்ல முடியும்.கூகுள் ஆண்ட்ராயாடு செல்பேசிகளுக்கு இந்த மேப் மென்பொருளை நிறுவிக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு ....


Thursday, July 14, 2011

உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்


ஜப்பானின் ஃபிஜிட்சு நிறுவனம் சமீபத்தில் K computer என்ற புதிய சூப்பர் கம்ப்யூட்டர் வடிவமைத்து வெளியிட்டுள்ளது.இதுதான் இப்போது உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் வேகம் 8.162 petaflops அல்லது வினாடிக்கு 8.162 quadrillion கணக்கீடுகளை செய்யும் திறனுடையது.இதற்கு முன் சீனாவின் NUDT Tianhe-1A என்ற சூப்பர் கம்ப்யூட்டர் உலகின் அதிவேக கணினியாக இருந்தது ,இதன் வேகம் 2.507 petaflops ஆகும்.


தற்போது இது 672 கேபினட்(cabinet) இணைக்கப்பட்ட மிகப்பெரிய கணினி கட்டமைப்பு.இதில் பயன்படுத்தப்படும் பிராசசர் 8 core SPARC64 VIIIfx .மொத்தம் 672 கேபினட்-லும் 68,544பிராசசர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ப்ராசசரிலும் 8 கோர் என்றால் மொத்தமாக 5,48,352 பிராசசர் கோர்-களை கொண்டுள்ளது.
மேலும் விவரம் அறிய இணைப்பை (K கம்ப்யூட்டர்)கிளிக்கவும்.

Wednesday, June 1, 2011

ஹார்ட்வேர் இன்ஜினீயர் புத்தகம்

கணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம்.2004


ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம் புத்தகங்கள் விற்பனையானது.

அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் திரு.பாலகுருசாமி அவர்களால் அணிந்துரை எழுதப்பட்ட புத்தகம்.அபாகஸ் கண்டுபிடிப்பில் ஆரம்பிக்கிறது முதல் அத்தியாயம் கணினி ஒருங்கினைத்தபின் ஏற்படும் பிழைகளை எவ்வாறு சரிசெய்வது வரை விவரிக்கப்பட்டு முடிகிறது கடைசி அத்தியாயம்.

இன்டெலின் 4004 பிராசசரில் தொடங்கி pentium 4 பிராசசரில் முடிகிறது
230 க்கும் அதிக பக்கங்களை கொண்ட புத்தகம்.சில அத்தியாயங்களின் ஒரு சில பக்கங்கள் உங்களுக்காக.


மூன்றாம் பதிப்பு வெளியிடுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளோம்.இந்த புத்தகம் தேவை படுபவர்கள் எனது மின்னஞ்சல் முகவரிக்கு தெரியபடுத்தவும்.

Artikel Terkait

0 comments

Post a Comment

Cancel Reply